நாமக்கல் மாவட்டம் கருவேப்பம்பட்டி அருகே உள்ள ஆத்தூராம் பாளையம் என்ற ஊரில் சதீஷ்குமார் மற்றும் மோகன் என்ற இரண்டு இளைஞர்கள் பாரம்பரிய கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறுவர் சிறுமியர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து தினசரி வகுப்புகள் மூலம் பயிற்றுவித்து வருகின்றனர்.
மேலும் இதற்காக ஒரு ரூபாய் கூட கட்டணம் பெறாமல் இலவசமாக கற்று தருகின்றனர். ஏனென்றால் இங்கு உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை குடும்பத் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதற்காக கட்டணம் என்று பெறப்பட்டால் ஒரு சில மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். ஆனால் எங்களது நோக்கம் அனைவருமே பயிற்சி பெற்று முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இதனால் தான் கடந்த 10 ஆண்டுகளில் யாரிடமும் கட்டணம் என்று பெறாமல் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். எங்களிடம் இதுவரை 500க்கு மேற்பட்ட மாணவர்கள் முழுமையாக பயிற்சி பெற்றுக் கொண்டு, மாணவர்கள் அவரவர் இருக்கும் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். அதுதான் எங்களது நோக்கமாகவும் இருக்கிறது.
மேலும் தொடர்ந்து சதீஷ்குமார் மற்றும் மோகன் கூறுகையில், எங்களது மாஸ்டர் பெருமாள், வைரம் என்பவர்கள் தான் நாங்கள் இதனை கற்றுக் கொள்ளவதற்கு காரணம். அவர்கள் தான் அனைத்து கலைகளையும் பயிற்றுவித்தார்கள். அதன் பின் பாரம்பரிய கலைகளை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வேண்டும் என்று அவர்கள் மூலம் தொடங்கப்பட்டது தான் செஞ்சோலை கலைக்கூடம். தற்போது இதனை ஆரம்பித்து பிறகு பல மாணவர்களை உருவாக்கி கொண்டு வருகிறோம்.
நாங்கள் கற்றுக் கொண்டதை அப்படியே விட்டுவிடாமல் பலருக்கும் சொல்லி தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக எங்களது விடா முயற்சியால் தற்போது ஏராளமான மாணவர்களை உருவாக்கி கொண்டு வருகிறோம்.
செஞ்சோலை கலைக்கூடத்தில் தினசரி குறைந்தது 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சிக்கு வருவார்கள். மேலும் ஆண்டு முழுவதும் பயிற்சி அளிப்பதற்கு காரணம் ஒரு கலையை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். வார இறுதியில் மட்டும் வகுப்புகள் வைத்தால் சில மாணவர்கள் வரை முடியாமல் செல்லலாம். இதனால் தினசரி வகுப்புகள் வைத்தால் ஒரு நாள் வர வில்லை என்றாலும் அடுத்த நாள் அதனை தொடர முடியும் என்பதற்காக தான் ஆண்டு முழுவதும் இலவச வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான சிலம்பம் முதல் ஒத்தக் கம்பு, சுருள் கம்பு, வேல் கம்பு, மான் கொம்பு, வாள் கேடயம், சுருள் கத்தி, சிலம்பம் போன்றவைகளை அழிந்து விட கூடாது என்பதற்காகவும், நம்முடைய பாதுகாப்பிற்கும் மிகுந்த ஒன்றாக இருக்கும். எந்தவொரு கலைகளைக் கற்றுக் கொண்டாலும் அது நம்முடைய பாதுகாப்புக்காக மட்டுமே இருக்கனுமே தவிர மற்றவர்களை துன்புறுத்தும் வகையில் சென்றுவிடக் கூடாது.
மேலும் அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளிலும் சிலம்பம் கற்று இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைவரும் இதுபோன்ற பாரம்பரிய தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்: மதன்- நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.