Home /namakkal /

Namakkal | தேவனாங்குறிச்சி ஊராட்சி இ-சேவை மைய வளாகத்தில் பூச்சி, புழுக்கள் தொல்லை

Namakkal | தேவனாங்குறிச்சி ஊராட்சி இ-சேவை மைய வளாகத்தில் பூச்சி, புழுக்கள் தொல்லை

தேவனாங்குறிச்சி இ சேவை மையம்

தேவனாங்குறிச்சி இ சேவை மையம்

Namakkal | நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சி ஊராட்சி இ-சேவை மையத்தில் பூச்சி, புழுக்கள் அதிகமாக இருந்ததால் தீயணைப்புத்துறையினர் வந்து தண்ணீர் அடித்து சுத்தம் செய்தனர்.

    அனைத்து அரசு சேவைகளுக்கும் கிராம மக்கள் தங்கள், ஊராட்சியிலே விண்ணப்பிக்கும் வகையில், கிராம சேவை மையங்கள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக, அந்தந்த ஊராட்சிகளிலே சேவை மையத்திற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு ஊராட்சி இ சேவை மையம் என்று செயல்பட்டு வருகின்றன.

    வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற நகரப்பகுதிக்கு சென்று விண்ணப்பங்களை வாங்கி, சமர்ப்பிக்க வேண்டி சூழ்நிலை இருந்தது. தாலுகா அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.

    தேவனாங்குறிச்சி இ-சேவை மையம்


    தற்போது எளிய முறையில் கிராம மக்கள் தாங்கள் இருக்கும் ஊராட்சியிலே இருப்பிடச்சான்று, வருவாய் சான்று, ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தல் மற்றும் விவசாயிகளுக்கு சிட்டா, பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் இருக்கும் பகுதியிலே விண்ணப்பிக்கும் வகையில் கிராம இ சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தேவனாங்குறிச்சி இ-சேவை மையம்


    இந்த நிலையில், தேவனாங்குறிச்சி ஊராட்சியில் செயல்பட்டு வரும் இ சேவை மையத்தில் தினசரி ஏராளமான கிராம மக்கள் தங்களுக்கு தேவையான விண்ணப்பங்கள் பதிவு செய்து பெற்றுக் கொண்டு வருகின்றன. இந்த ஊராட்சி இ சேவை மையம் கட்டிடம் அருகில் உள்ள மரங்களில் அதிக அளவில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் இருப்பதால் சேவை மையத்திற்குள் உள்ளே வந்து மக்களை துன்புறுத்தி வந்துள்ளன.

    தேவனாங்குறிச்சி இ-சேவை மையம்


    மேலும் அங்கு வேலை செய்பவர்களையும் கடித்து உள்ளது. மேலும் கை மற்றும் கால்களில் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால் பூச்சி, புழுக்களை அழிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    இதனையடுத்து, ஊராட்சி மன்றம் சார்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பின் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து தண்ணீர் பீச்சி அடித்து மரங்களில் உள்ள பூச்சி, புழுக்களை அழித்தனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி