முகப்பு /நாமக்கல் /

உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு பேரணி.. நாமக்கல் ஆட்சியர் துவக்கி வைப்பு!

உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு பேரணி.. நாமக்கல் ஆட்சியர் துவக்கி வைப்பு!

X
உலக

உலக முழுவதும் பிப்ரவரி 4-ஆன இன்று உலக புற்று நோய் தினம் கடை பிடிக்கப்பட்டு வருகி

Namakkal Rally | புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுகாதார துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல்லில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் துவக்கி வைத்தார், 150க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உலக முழுவதும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்று நோய் தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுகாதார துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் சுற்றுலா மாளிகை அருகே இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது மோகனூர் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, கடைவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அணிவகுத்து சென்றனர். இந்த பேரணியில் 150க்கும் மேற்பட்ட செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Cancer, Local News, Namakkal, Rally