முகப்பு /நாமக்கல் /

உலக புகையிலை எதிர்ப்பு தினம்.. நாமக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

உலக புகையிலை எதிர்ப்பு தினம்.. நாமக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

X
நாமக்கல்

நாமக்கல் மாரத்தான்

Namakkal marathon | மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிளும் ரொக்க பரிசும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோமீட்டர், 2 கிலோமீட்டர் என 4 விதமாக நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக நடத்தப்பட்டன. இத்தோடு 35 வயதிற்கு மேற்பட்டோருக்கு என எனவும் தனியாக போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தருமபுரியைச் சேர்ந்த தமிழ்மணி முதலிடத்தையும், சிவகிரியை சேர்ந்த சிவானந்தம் இரண்டாம் இடமும், எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர். 10 கி.மீ பெண்களுக்கான பிரிவில் கோகிலா முதலிடமும், ஷப்னாசெரின் 2-ம் இடமும், வித்யா 3-ம் இடமும்பெற்றார்.

5 கிலோமீட்டர் 35 வயதிற்கும் மேற்பட்டோர்பிரிவில் ஆண்களுக்கான முதலிடத்தை சீனிவாசனும், இரண்டாமிடத்தை ரகுபதியும், மூன்றாமிடத்தை ரவியும் வெற்றி பெற்றனர். இதே பிரிவில் பெண்களுக்கான போட்டியில் சத்தியவதி முதல் பரிசையும், ஷகிலா பானு இரண்டாம் பரிசையும்,வித்யா மூன்றாம் பரிசையும் பெற்றார்.

5 கிலோமீட்டர் ஆண்களுக்கான பிரிவில் சுமன் குமார் முதல் பரிசையும், சூர்யா இரண்டாம் பரிசும், நந்தா மூன்றாம் பரிசும் வென்றனர். பெண்கள் பிரிவில் ஜனனி முதல் பரிசையும், இரண்டாம் பரிசு பவித்ராவும், மூன்றாம் பரிசு அபியாவும் வென்றனர். 3 கிலோ மீட்டர் பிரிவில் விஸ்வந்த் முதல் பரிசும், வேல்முருகன் இரண்டாம் இடமும், ராஜேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் தகுனா முதலிடமும், தனிஷ்கா இரண்டாம் இடத்தையும், திவ்யா மூன்றாம் இடமும் பிடித்தனர்.

மேலும் சிறுவர்களுக்கான இரண்டு கிலோமீட்டர் பிரிவில் மணிகண்டன் முதலிடத்தையும், விஸ்வம் இரண்டாம் இடமும், சரவணக்குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.சிறுமிகளுக்கான பிரிவில் புவனா முதலிடமும், அனுஷ்கா இரண்டாம் இடமும், தட்சிணா மூன்றாம் இடம் பிடித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிளும் ரொக்க பரிசும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது . போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, Tobacco