முகப்பு /நாமக்கல் /

ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு.. கட்டனாச்சம்பட்டி கிராமத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்..

ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு.. கட்டனாச்சம்பட்டி கிராமத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்..

X
நாமக்கல்

நாமக்கல் ஆர்ப்பாட்டம்

Namakkal - Rasipuram Municipality : நாமக்கல் மாவட்டம்  கட்டனாச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கைகளில் பட்டு புடவைகள், நூல்களை வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் கைத்தறி தொழில் அதிக அளவில் காணப்படுவதால் அப்பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புடவைகள், வேட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன், தமிழக அரசால் பல்வேறு நகராட்சிகளுடன் கிராமப்புற பகுதிகளை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராசிபுரம் நகராட்சியுடன் பல்வேறு கிராமங்களை இணைக்கும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனை எதிர்த்து 100க்கும் கட்டனாச்சம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் கைகளில் பட்டு புடவைகள், நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் நூல்களை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், நகராட்சியுடன் தங்களது கிராமத்தை இணைத்தால் தங்களுக்கு பல்வேறு சலுகைகள், வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை இதனால் தமிழக அரசு எங்களது கிராமத்தை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, Protest