ஹோம் /நாமக்கல் /

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் - நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் - நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல்

நாமக்கல்

What should people do during Northeast Monsoon in Namakkal |வடகிழக்கு பருவமழை காலங்களில் நாமக்கல் மக்கள், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

அப்போது வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மக்கள் செய்ய வேண்டியவை குறித்தும் அவர் கூறுகையில், “பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மழைநீர் செல்ல கூடிய கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க ;நாமக்கலில் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன் உதவி - தகுதி, விண்ணப்பிக்கும் முறை

மழை நீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் துறையினர் தங்கள் பணிகளை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைக்காலங்களில் குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும்.

வருவாய்த்துறையினர் நிவாரண முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மாற்று இடங்களையும் அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சார வாரிய அலுவலர்கள், பருவமழைக்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்சார இடையூறுகளை பழுது பார்க்க 24 மணி நேரமும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க ; 30ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் - நாமக்கல் கலெக்டர் உத்தரவு

அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண்- 1077 மூலம் தெரிவிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்கள் TNSMART என்ற செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து மழை குறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal