முகப்பு /நாமக்கல் /

திருச்செங்கோட்டில் விமர்சையாக நடைபெற்ற காமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம்

திருச்செங்கோட்டில் விமர்சையாக நடைபெற்ற காமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம்

X
காமாட்சி

காமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம்

Namakkal News : திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியில் காமாட்சி அம்மன் திருக்கல்யாணம் வைபோகம் சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி காலணியில் காமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு காமாட்சிக்கு சீர் கொடுத்தும், மொய் எழுதியும் ஊர்மக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி காலனியில் 42 ஆண்டுகளாக ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த மாதம் 28ம் தேதி கணபதி பூஜை உடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, தீர்த்த குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்ச்சியான காமாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்தும், பட்டுப்புடவை எடுத்து வந்தும் அம்மனுக்கு கொடுத்து வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பின்பு ஊர் பொதுமக்கள் தங்கள் சார்பாக மொய் எழுதியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Namakkal