முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த இல்லம் தேடி கல்வி அரங்கு

நாமக்கல் புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த இல்லம் தேடி கல்வி அரங்கு

X
இல்லம்

இல்லம் தேடி கல்வி அரங்கு 

Namakkal | நாமக்கல்லில் முதன் முறையாக நடந்த புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட அரங்கு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் முதல் முறையாக புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டடுள்ளது. அதில் இல்லம் தேடி வரும் கல்வி எனும் தலைப்பில் அரங்கு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் காற்றாலை, மின்விசிறி, பொம்மைகளால் செய்த வீடுகள், உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் தானிய வகைகள், தேங்காய் மூடிகளால் செய்யப்பட்ட பொம்மை மனிதன், என அனைத்துமே மாணவ, மாணவிகளையும் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் வெகுவாக கவர்ந்தன.

இல்லம் தேடி கல்வி என்பது மாணவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது இடத்தில் அல்லது தன்னார்வலர் இல்லத்தில் மாணவர்களை 1:20 விகிதப்படி சேர்த்து ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இவர்களுக்கு கதை, ஆடல்-பாடல், நாடகம், விளையாட்டு, பொம்மலாட்டம் ஆகியன செயல்பாடுகள் மூலம் கல்வியை கற்பிப்பது தான் இல்லம் தேடி கல்வி ஆகும்.

இந்த அரங்கு நாமக்கல் புத்தக திருவிழா நடக்குமிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், நாமக்கல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஏ. கே .பி .சின்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

First published:

Tags: Local News, Namakkal