முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் பால்குட ஊர்வலம் சென்று எதிர்ப்பை காட்டிய கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?

நாமக்கல்லில் பால்குட ஊர்வலம் சென்று எதிர்ப்பை காட்டிய கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் பால்குட ஊர்வலம் சென்று எதிர்ப்பை காட்டிய கிராம மக்கள்

Namakkal News : நாமக்கல் வளையப்பட்டி பகுதியில் பால் குடத்துடன் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி ஆகிய பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும், விவசாயமும் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வளையப்பட்டி, புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் வளையப்பட்டியில் பால்குடம் எடுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆஞ்சநேயருக்கு செய்யப்பட்ட பால் அபிஷேகம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத்தொடர்ந்து பால் குடத்துடன் வளையப்பட்டி பகுதியில் ஊர்வலமாக சென்று பின்னர் நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பாலை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    First published:

    Tags: Local News, Namakkal