ஹோம் /நாமக்கல் /

கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

X
ஆட்சியர்

ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள்

Namakkal | நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவை நிறுத்தக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் செண்பகமாதேவி கிராமத்தில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அண்ணமார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

தங்களிடம் கும்பாபிஷேகம் விழா தொடர்பாக எந்தவித ஆலோசனைகளையும் ஏற்காமல் தங்கள் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார். இதனால் ஊர் மக்களுக்கு தனி நபர்களுக்கு இடையே பிரச்சனைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கும்பாபிஷேக விழாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

நாமக்கல்லில் மணமக்களுக்கு தலா 2 கிராம் தங்கம் நாணயங்களை வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்

மனுவைப் பெற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

செய்தியாளர்: பிரதாப், நாமக்கல்.

First published:

Tags: Local News, Namakkal