ஹோம் /நாமக்கல் /

நாளை நாமக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

நாளை நாமக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Namakkal district News | நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (நவம்பர் - 1) கிராம சபை கூட்டம் நடக்கும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினமான   நவம் பர் 1ஆம் தேதி (நாளை) கிராம சபை கூட்ட நடத்தப்படுகிறது. இதையொட்டி காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடக்க இருக்கிறது நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

இணையவழி வீட்டுவரி-சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல், 2021 -22 மற்றும் 2022 - 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில், அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், இதில் பஞ்சாயத்து நிர்வாகம் குறைகள், பொதுப்பணிகளில் குறைகள், குடிநீர், சாலை உள்ளிட்டவைகளில் குறித்து மனு அளிக்கலாம்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Village