முகப்பு /நாமக்கல் /

திருச்செங்கோட்டில் பெண்கள் பள்ளி கழிவறைகளை திடீர் ஆய்வு செய்த நகர் மன்றத் தலைவர் 

திருச்செங்கோட்டில் பெண்கள் பள்ளி கழிவறைகளை திடீர் ஆய்வு செய்த நகர் மன்றத் தலைவர் 

ஆய்வில் நகர்மன்றத் தலைவர்

ஆய்வில் நகர்மன்றத் தலைவர்

Namakkal | அரசு பெண்கள் பள்ளி கழிவறையை சுத்தமாக வைக்க வேண்டும் என்று திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறைகளைநகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு திடீர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் நோய் தொற்று ஏற்படுவதாக மாணவிகளிடமிருந்து புகார் வந்தது.

அதனைத்தொடர்ந்து நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறைகளை திடீர் ஆய்வு செய்தார். துப்புரவு அலுவலர்களை அழைத்து வந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். தினமும் இருமுறை சுத்தம் செய்து கிருமி நாசினிகள் தெளிக்கவும் ஒவ்வொரு இடைவேளை நேரத்திலும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பள்ளிக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து மனு கொடுக்குமாறும் பள்ளி ஆசிரியைகளை நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டார்.

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்..!

அடுத்த முறை ஆய்வுக்கு வரும் போதுஇதுபோல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தூய்மைப் பணி மேற்பார்வையாளர் துரைசாமி மற்றும் பள்ளி ஆசிரியைகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

First published:

Tags: Local News, Namakkal