ஹோம் /Namakkal /

நாமக்கலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான விழா- பொதுமக்களும் பங்கேற்பு

நாமக்கலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான விழா- பொதுமக்களும் பங்கேற்பு

ரத்ததானம் வழங்கும் விஜய் மக்கள் இயக்கம்

ரத்ததானம் வழங்கும் விஜய் மக்கள் இயக்கம்

நாமக்கலில் மக்களிடையே ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான வழங்கும் விழா நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்தான வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

  இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், ’எங்களது இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஆதரவற்றோர்களுக்கு இயன்ற உதவிகள் என செய்து வருகிறோம். இதிலும் குறிப்பாக ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறோம். ஏனென்றால் ரத்த தானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

  விஜய் மக்கள் இயக்கத்தினர்

  விபத்து, அறுவை சிகிச்சையின் போது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ரத்தம் தேவைப்படலாம். அத்தகைய இக்கட்டான சூழலில் வழங்கப்படும் ரத்தம் ஒருவரை உயிர் காப்பாற்றுவது மட்டுமின்றி மறுவாழ்வும் அளிக்கிறது. இதனாலேயே ரத்து தானம் அனைவரும் வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

  ரத்தம் வழங்கும் இளைஞர்

  தற்போது எங்களது விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்த நாள் முன்னிட்டும், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஊக்குவிக்கும் விதமாக ரத்த தானம் வழங்கும் விழா நடத்தினோம்.

  சான்றிதழ்களுடன் விஜய் மக்கள் இயக்கத்தினர்

  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள். மேலும் ஒவ்வொருவரும் வருடத்தில் ஒரு முறையாவது ரத்த தானம் செய்ய வேண்டும். ரத்த தானம் செய்வது மூலம் நமது உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகி இன்னும் உடல் புத்துணர்ச்சியுடன், ஆரோக்கியத்திடனும் செயல்பட உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal