முகப்பு /நாமக்கல் /

கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

X
தமிழகத்தில்

தமிழகத்தில் பல்வேறு வகையான நலப்பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றன

Namakkal News | கோடை வெப்பத்தை தணிக்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

கோடை வெப்பத்தை தணிக்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டன.

தமிழகத்தில் பல்வேறு வகையான நலப்பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பிஸ்கட் வழங்கி ரத்ததான முகாம் ஆகியவை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நாமக்கல் திருச்சி சாலையில் ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் முகாம் அமைத்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடையை வெட்பத்தை தணிக்க தர்பூசணி, நீர்மோர், தண்ணீர், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணி மேற்கு மாவட்ட தலைவர் அருண் செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Local News, Namakkal, Vijay makkal iyakkam