முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மலைக்கோட்டைக்கு காதலர்கள் செல்ல ஒரு நாள் தடை...

நாமக்கல் மலைக்கோட்டைக்கு காதலர்கள் செல்ல ஒரு நாள் தடை...

X
மாதிரிப்

மாதிரிப் படம்

Namakkal | நாமக்கல் மலைக்கோட்டைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் சுமார் 250 அடி உயரம் கொண்ட பிரசித்திபெற்ற மலைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த மலையின் மீது வரதராஜ பெருமாள் சன்னதியும், இஸ்லாமியர்களின் தர்கா ஒன்றும் உள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் இந்த மலைக் கோட்டையானது கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது.

அந்த கால கட்டத்தில் அவர் மலைக் கோட்டையில் வரதராஜ பெருமாள் கோவிலை கட்டினார். அதன்பின் ராமச்சந்திர நாயக்கரை போரில் தோற்கடித்து திப்புசுல்தான் கோட்டையை கைப்பற்றினார். அப்போது அங்கிருந்த வரதராஜ பெருமாள் கோவிலை எதுவும் செய்யாமல் அதன் அருகிலேயே தர்கா ஒன்றையும் திப்பு சுல்தான் உருவாக்கினார்.

அதன் பின் வெள்ளையரை எதிர்ப்பதற்காக இந்தக் கோட்டையை பயன்படுத்தினார் எனவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. மலையின் மீது வரதராஜ பெருமாள் கோவிலும் இஸ்லாமிய தர்காவும் இருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த சூழலில், நாமக்கல் மலைக்கோட்டைக்கு தினசரி சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஏராளமான காதலர்கள் வருவது வழக்கம். காதலர்கள் இங்குள்ள குன்றுகளில் அமர்ந்து முகம் சுழிக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

இந்நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் ஏராளமான காதலர்கள் மலைக்கோட்டைக்கு சென்று முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள் என்பதால் இன்று ஒருநாள் மட்டும் மலைக்கோட்டை செல்ல தடை விதித்து தொல்லியல் துறை மற்றும் நாமக்கல் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

First published:

Tags: Local News, Namakkal, Valentine's day