முகப்பு /நாமக்கல் /

உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நாமக்கல் சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு..

உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நாமக்கல் சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு..

X
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Senthamangalam Jallikattu 2023 | சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. 400 காளைகள் , 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஆண்டாண்டு சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் நடத்தப்படாத இருந்த நிலையில் சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியினை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்மாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வாடிவாசல் வழியாக வெளி வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்தப்பின் போட்டிகள் தொடங்கப்பட்டது. திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. இதில் 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர்.

முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே விழாக் குழுவினரும், மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே போல் காளைகளும் கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனையிட்ட பிறகே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. மாடு பிடி வீரர்களுக்கோ, பொது மக்களுக்கோ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Namakkal