ஹோம் /நாமக்கல் /

திருச்செங்கோட்டில் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போன மஞ்சள்- விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்செங்கோட்டில் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போன மஞ்சள்- விவசாயிகள் மகிழ்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மஞ்சள் 70 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchengode, India

  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில், மஞ்சள் 70 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது.

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள வேளாண் சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் விற்பனை ஏலத்தில், ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல்,

  மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் 1,600 மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

  ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொள்முதலுக்கு வந்திருந்தனா்.  விரலி ரகம் குவிண்டாலுக்கு 7,102 ரூபாய் 8,662 ரூபாய் வரை விற்பனையானது.

  கிழங்கு ரகம் ரூ. 6,802 முதல் ரூ. 7,609 வரை விலைபோனது. பனங்காளி ரகம் ரூ.10,412 முதல் ரூ. 14,012 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ. 70 லட்சத்திற்கு மஞ்சளை ஏலத்திற்கு எடுத்தனர் வியாரிகள்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal