வெப்படை அருகே புண்ணாக்கு மூட்டைகளை ஏற்றிச் வந்த லாரி ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் சற்று கண் அசந்ததால் லாரி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி நின்றது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே தனியார் மாட்டு தீவன உற்பத்தி நிறுவனத்திற்கு புண்ணாக்கு மூட்டைகள் ஏற்றிவந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பரமகுரு என்பவர் ஈரோடு அருகே உள்ள தனியார் மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனத்திற்கு புண்ணாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் டூ ஈரோடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஈகாட்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர் பரமகுரு சற்று கண் மூடியதால், லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சுக்குநூறாக நோருங்கியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை காவல்துறையினர் விபத்துக்குள்ளான லாரியிலிருந்து காயமடைந்த ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து மூட்டைகளுடன் இருந்த லாரி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தி காவல் துறையினர் போக்குவரத்து சரி செய்தனர்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.