Home /namakkal /

சித்தளத்தூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

சித்தளத்தூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

நாமக்கல் பள்ளி

நாமக்கல் பள்ளி

சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டம் சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    ஒவ்வொரு பள்ளியையும் தன்னிறைவு பெற்றவையாக மாற்ற வேண்டும் என்பதே பள்ளி மேலாண்மைக் குழுக்களின் நோக்கமாக இருக்கிறது. மேலும் பள்ளியில் சேர்க்கப்படாத ஆறு முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து வயதிற்கு ஏற்ற வகுப்புகளில் சேர்த்து அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும்.

    பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்


    அதுமட்டுமின்றி பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் அறிந்து நிறைவேற்றும் பொறுப்பும் உள்ளது. இதனிடையே பள்ளி நிர்வாகம் என்பது தலைமையாசிரியருக்கு மட்டும்தான் என்கிற நிலை இல்லாமல் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் பங்களிப்பு உள்ளது என்பதை பள்ளி மேலாண்மை குழு வலியுறுத்தியுள்ளது.

    தற்போது மேலாண்மை குழு மாற்றி அமைக்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது‌. இதில் மேலாண்மை குழு பற்றி முக்கிய பண்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது‌.

    மேலும், இந்தப் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுனர் சமீனா பானு  கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை சி.பி.சாந்தி தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியைகள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி