அரசு போட்டித் தேர்வுகளை எளிமையாக எதிர்கொள்ளும் வகையிலும், நேர்மையான அரசு அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இலவசமாக பயிற்சி வகுப்புகள் திருச்செங்கோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, அவ்வை கல்வி நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல அரசு அதிகாரிகளையும் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் மாணவர்களை வெற்றி பெறச் செய்து வெற்றிகரமாக இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தற்போது ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த இலவச பயிற்சி மையம், எளிய முறையில் ஏழை எளிய மாணவர்கள் முதல் பலதரப்பட்ட வேலைக்கு செல்வோர் வரை, அனைவரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், லஞ்சம், ஊழல் என எதற்கும் அடிபணியாத நேர்மையான அரசு அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்பதே இம்மையத்தின் பிரதானமான நோக்கமாக கொண்டு இயங்கி வருவதாக கூறுகின்றனர்.
மேலும் பயிற்சி மையத்தின் நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல மாணவர்கள், இப்பயிற்சி மையத்தில் படித்து பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வருகை புரிகின்றனர்.
மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய ஆசிரியர்களும் ஏதாவது ஒரு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்தவர்கள் தான் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த குரூப் 2 தேர்விற்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது குரூப் 4 அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் ஏழை, எளிய மாணவர்களும் ஏதாவது அரசு துறையிலோ அல்லது வங்கி பணிகளிலோ கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது என பயிற்சி மையத்தின் நிர்வாகிகள் ஜீ. கோபி. பாலசுப்பிரமணியம், கணேஷ் பாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.
மாணவர்கள் கூறுகையில், ஒவ்வொருவரும் பல்வேறு பகுதிகளில் இருந்து பயிற்சி வகுப்புக்கு வருகின்றோம். இங்கு வரும் பல மாணவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் முதல் கல்லூரிக்கு செல்பவர்கள் வரை அதிகமாக இருக்கிறார்கள். இங்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் இலவசமாக போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் எடுக்கப்படுவதால் எங்களின் அரசு வேலைவாய்ப்பு கனவும் எளிதில் நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இந்த மையத்தில் இலவச பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம்..
917010071644 ,
9443506890,
8144389916
திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து அவ்வை கல்வி நிலையத்திற்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.