Home /namakkal /

நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை- கிடைக்கும் இடங்கள் இதோ.! 

நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை- கிடைக்கும் இடங்கள் இதோ.! 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் பாரம்பரிய மிக்க நெல் ரகங்கள் 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
பாரம்பரிய மிக்க நெல் ரகங்களை விற்பனை செய்யவும், நெல் ரகங்களை உற்பத்தி செய்யவும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதையொட்டி விவசாயிகளுக்கு மானியங்களையும் அறிவித்து வருகிறது வேளாண்மை துறை.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கு, நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.

நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லிமலை வட்டாரத்தில் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.

கொல்லிமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் கருப்புக்கவுணி 100 கிலோ இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. கொல்லிமலை வட்டார நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கருப்பு கவுணி பாரம்பரிய நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் பெற்று சாகுபடி செய்யலாம்.

ஐஆர் 20 மற்றும் ஏடிடி 45 நெல் ரகங்கள் போதிய அளவு கொல்லிமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளன. மேற்கண்ட விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் விதை கிராமத் திட்டத்தின கீழ் 50 சதவீத மானிய விலையில் பெற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொண்டோ அல்லது கொல்லிமலை வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியோ பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி