வேளாண்மையில் நமது பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில், உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்த கண்காட்சி தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என வேளாண் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிறந்த பண்புகளை கொண்ட பல்வேறு பாரம்பரியம் மிக்க உள்ளூர் பயிர் ரகங்களை கண்டறிந்து, பிரபலப்படுத்துவதற்காக கண்காட்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) கீழ் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் பயிர் ரகங்கள் மூலம், வேளாண் விஞ்ஞானிகள், வீரியமிக்க குணங்களை, சிறந்த மருத்துவ பண்புகளை கொண்ட பாரம்பரிய உள்ளூர் உயர் பயிர் ரகங்களை காட்சி பொருளாக வைத்தனர்.
நெல் ரகங்களில் வைகறை சம்பா, மணி சம்பா ,பனங்காட்டு குடவாழை, ஒரிசா நெட்டை பால்குட வாழை, கருடன் சம்பா மற்றும் சிறுதானிய வகைகளான திணை, சாமை, வரகு, குதிரைவாலி, பாரம்பரிய கருப்பு வகை அரிசி, சிவப்பு கவுனி அரிசி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் படிக்க : மாடித்தோட்டத்திலிருந்து இப்படி கூட வருமானம் பார்க்கலாமே.. அசத்தும் தென்காசி பட்டதாரி பெண்
மேலும் நாட்டு காய்கறி விதைகளான சிவப்பு வெண்டை, புடலை, நீளம் புடலை, குட்டை பச்சவண்டை,மரவண்டை, வெள்ளரி கோழி அவரை உள்ளிட்ட காய்கறி விதைகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியில் பத்துக்கு மேற்பட்ட அரங்குகளின்வைக்கப்பட்டுள்ள இந்த பயிர் ரகங்களை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கண்டு களித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பாரம்பரிய வேளாண் கண்காட்சியை நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Namakkal