Home /namakkal /

ஆர்ப்பரித்து கொட்டும் கொல்லிமலை ஆகாய கங்கை அருவி - சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆர்ப்பரித்து கொட்டும் கொல்லிமலை ஆகாய கங்கை அருவி - சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆகாய கங்கை அருவி

ஆகாய கங்கை அருவி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது கொல்லிமலை. இந்த மலைப் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் நீர் பெருக்கெடுத்து பாய்ந்து செல்கிறது.

    அவ்வாறே கொல்லிமலையில் புகழ் வாய்ந்த அருவியான ஆகாய கங்கையிலும் நீண்ட தூரத்திற்கு சாரல் வீசி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அங்கு செல்ல கடந்த சில நாட்களாக அங்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் அந்த தடை நீடிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதியில் இருந்து கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அருகில் உள்ள ஆகாய கங்கையில் நீராடி மகிழ்வது வழக்கம். ஆனால் தற்போது அந்த பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி