நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட சில துணை மின் நிலையங்களல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (18-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர்கள் நாகராஜன் மற்றும் ராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மின் தடை பகுதிகள்:
சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல, வேலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Must Read : அதியசம் நிறைந்த காஞ்சிபுரம் நடவாவி கிணறு - 48 படிகள், கிணற்றுக்குள் 12 தூண்களைன் கொண்ட அழகிய மண்டபம்!
மேலும், பரமத்திவேலூர் பகுதியில் உள்ள ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown