ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் பவர்கட் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் பவர்கட் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் நாளை (06-12-2022) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணைமின் நிலையம் மற்றும் திருச்செங்கோடு துயைமின் நிலையம் ஆகியவற்றில் நாளை (செவ்வாய் கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதியில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கே, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதன்சந்தை துணைமின் நிலையம்:

செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, முணுசாவடி, களங்காணி மற்றும் காரைக்குறிச்சி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்செங்கோடு கோட்டம்:

வையப்பமலை, கருங்கல்பட்டி, சொர்க்கம் நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், அவிநாசிபட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

இதேபோல, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்கட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown