முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - உஷார்... தண்ணீரை டேங்கில் நிரப்பி வச்சிக்கோங்க

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - உஷார்... தண்ணீரை டேங்கில் நிரப்பி வச்சிக்கோங்க

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம்வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (21-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.

Must Read : மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

மின் தடை பகுதிகள்:

வளையப்பட்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் இடங்களான வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர் மற்றும் ஒருவந்தூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown