முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கா?

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Namakkal District News | நாமக்கல் மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மின்வாரிய, செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 110/22 கி.வா துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில், அதிக திறன் கொண்ட மின் மாற்றி (25 மெகாவாட்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி நாளை 25ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை, வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதையொட்டி வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 25ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown