ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், பரமத்தி வேலூர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (நவம்பர் 19) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம் சார்பில் நாளை மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, இந்த பகுதி பொதுமக்கள் மின்தடை செய்யப்படும் நேரத்தில், மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read:ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

அதன்படி, சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown