Home /namakkal /

நாமக்கல்லில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

நாமக்கல்லில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி அருகே துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பகுதியில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்டும் என பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

இதேபோல், முசிறி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல் புதூர், கொட்டாம்பட்டி, ‌நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசாபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கி பாளையம் புத்தூர் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேப்பமரத்து புத்தூர், மணிகட்டிபுத்தூர், கணக்கம்பாளையம், சிங்கிலிபட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம், சுப்பநாயக்கனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் அறிவித்துள்ளார்.

எனவே, இந்த பகுதியில் வசிப்போர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
Published by:Arun
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி