ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை... உங்க பகுதி இருக்கானு பாருங்க..

நாமக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை... உங்க பகுதி இருக்கானு பாருங்க..

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Namakkal Power Cut |நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (20.10.22) மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ராசிபுரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் அறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மெட்டாலா துணை மின் நிலையத்தில் நாளை (20.10.2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Must Read : உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

மேலும், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரிய கோம்பை, பெரப்பன் சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், வரகூர் கோம்பை, கரியாம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் உரிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown