ஹோம் /நாமக்கல் /

பி.எம். கிசான் நிதி பெற நாளை கேஓய்சி முகாம்.. நாமக்கல் விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு

பி.எம். கிசான் நிதி பெற நாளை கேஓய்சி முகாம்.. நாமக்கல் விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு

பி.எம். கிசான்

பி.எம். கிசான்

Namakkal farmers | நாமக்கல் விவசாயிகள் பிரதமரின் கிஷான் திட்டத்தில் (PM Kisan Scheme) ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைக்கும் கேஒய்சி முகாம் நாளை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பிரதமரின் கிஷான் திட்டத்தில் (PM Kisan Scheme) ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைக்கும் கேஒய்சி முகாம் நாளை அஞ்சல் அலுவகத்தில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கிஷான் நிதி 12வது தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க விவசாயிகளின் பட்டா சிட்டா, வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவைற்றை இணைத்து கேஓய்சி செய்து வேளாண்மை அலுவலங்கள், கூட்டுறவு வங்கிகள், இ-சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வங்கி கணக்கு எண்களை ஆதாருடன் கேஒய்சி செய்யாதவர்கள் பட்டியல் குறித்து வட்டார வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவற்றை, அருகிலுள்ள, அரசு பொது சேவை மையம், தபால் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று, கண்டிப்பாக பதிவை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கவில்லை என்றால், ஊக்கத்தொகை கிடைக்காது.

Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பது மற்றும் இ.கே.ஒய்.சி ஆதார் எண்ணுடன் இணைக்க குப்பிச்சி பாளையம் அஞ்சல் அலுவலகத்தில் நாளை முகாம் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிரதாம கிஷான் திட்டத்தில் இணைக்காத விவசாயி கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்து ள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Farmers, Local News, Namakkal, PM Kisan