ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இந்த ஊர்களில் எல்லாம் மின் தடை

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இந்த ஊர்களில் எல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Namakkal Power cut Areas | நாமக்கல் மாவட்டம் நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் நல்லூர் துணை மின்நிலையத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 8), பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரத்தை மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்: நல்லூர், கந்தம்பாளையம், ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம்,  குன்னமலை, மற்றும் கவுண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown