முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்...

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்...

தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள

தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள

Namakkal Vegetable Market | நாமக்கல் உழவர் சந்தையில் இன்று பிப். 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை  நாமக்கல் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று பிப். 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் :

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 40 முதல் 70, தக்காளி ரூ. 25 முதல் 28, வெண்டைக்காய் ரூ. 50 முதல் 58, அவரை ரூ. 30 முதல் 44, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 100, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 25 முதல் 30, பாகல் ரூ. 36 முதல் 40, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10,வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 100, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 40, பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 40 முதல் 45, கேரட் ரூ. 36 முதல் 40, பீட்ரூட் ரூ. 32 முதல் 36, உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் ரூ.27  சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 18, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பழங்கள் விலை நிலவரம் :

கொய்யா ரூ. 30 முதல் 60, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40,ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, மாம்பழம் ரூ. 60, எலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 30 முதல் 40, தர்பூசணி ரூ. 12, விளாம்பழம் ரூ. 40 க்கு நாமக்கல் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கடலை ரூ. 45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50, கறிவேப்பிலை ரூ. 60, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 90, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ. 36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 25, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 36, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 28 முதல் 32, பச்சை பட்டாணி ரூ.50க்கு விற்பனையாகியுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal