ஹோம் /Namakkal /

நாமக்கல்: நாளை (16.06.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: நாளை (16.06.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்

நாமக்கல் - மின் தடை அறிவிப்பு

Namakkal District: நாமக்கல்லில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்கள் சரியாக இருக்கிறதா? மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா? என்று சரிபார்க்கும் வகையில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  அதன்படி நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, நாமக்கல்லில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை 16.06.2022 அன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம்,கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக பொதுமக்கள்  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  Published by:Arun
  First published:

  Tags: Namakkal, Power cut