Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? - முழு விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? - முழு விவரம்

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமையான நாளை  (ஜுன் 7ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது.   மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமையான நாளை  (ஜுன் 7ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, குமாரபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    ஆகையால் குமாரபாளையம் நகரம்,
    கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், சத்யா நகர், வேமன் காட்டுவலசு, சாமியம்பாளையம்,
    சடையம்பாளையம், தொட்டிபாளையம், டி. வி. நகர், கொடாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம்,
    தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு
    மற்றும் வளையக்காரனூர் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Electricity, Namakkal

    அடுத்த செய்தி