முகப்பு /நாமக்கல் /

தமிழ்நாடு பட்ஜெட் 2023 - நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைக்கும் 4 அம்ச கோரிக்கை

தமிழ்நாடு பட்ஜெட் 2023 - நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைக்கும் 4 அம்ச கோரிக்கை

X
நாமக்கல்

நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைக்கும் 4 அம்ச கோரிக்கை

Namakkal News | தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் தனி சிறப்பு பெற்றது. முட்டை உற்பத்தியில் இது இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செய்கிறது. இங்கு, பண்ணைகளில் வளர்க்கப்படும், 5 கோடி கோழிகள் மூலம், தினமும் 3.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், தமிழ்நாடு, கேரளா மாநிலத்துக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அத்துடன், தம்ழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும் இங்கிருந்துதான் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. நாமக்கல்லில் முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு‌ நிர்ணயித்து வருகிறது. வாரத்திற்கு 3 நாட்கள் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் அடங்கிய குழு தினசரி முட்டை விலையை நிர்ணயித்து வருகிறது.

இந்நிலையில், 2023 -24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை மறுநாள் (20ம் தேதி) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர், முட்டைகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோரிக்கைகள் என்னென்ன?

1) முட்டைகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.

2) தேவையற்ற தானியங்களை கோழிக்கு உணவாக அளிக்க உதவ வேண்டும்.

3) கோழி பண்ணைகளுக்கான மின்சாரத்தை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.

4) முட்டைகளின் தரத்தின் அடைப்படையில் விலை நிர்ணயம் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Namakkal, TN Budget 2023