முகப்பு /நாமக்கல் /

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா - 10,000 பக்தர்கள் ஊர்வலம்..

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா - 10,000 பக்தர்கள் ஊர்வலம்..

X
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில்

Namakkal News | திருச்செங்கோடு சின்ன ஓம் காளியம்மன் மாசி குண்டம் திருவிழாவை ஒட்டி குண்டம் இறங்க காப்பு கட்டிய 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நான்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchengode, India

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி குண்டம் திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி பூச்சாற்றுகளுடன் தொடங்கியது.

குண்டமிறங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தினசரி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில் காப்பு கட்டிய அனைத்து பக்தர்களும் மலையடி குட்டையில் இருந்து நேற்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யும் சிறப்பு நிகழ்வு நடந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மலையடிக்குட்டையில் இருந்து குடங்களில் தீர்த்தங்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அக்னிக் கரகம், அலகு குத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடந்தது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி கரகம் ஏந்தியும் பலர் அலகு குத்தி வந்தனர்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்து சின்ன ஓங்காளி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து வருகின்ற ஏழாம் தேதி அதிகாலை குண்டமிறங்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இரவு புஷ்ப பல்லக்கில் அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

First published:

Tags: Local News, Namakkal