ஹோம் /நாமக்கல் /

கையில் மது பாட்டிலுடன் துணிவு படம் பார்க்க வருகை.. ரசிகர்களால் சேதமான நாமக்கல் கே.எஸ் தியேட்டர்..

கையில் மது பாட்டிலுடன் துணிவு படம் பார்க்க வருகை.. ரசிகர்களால் சேதமான நாமக்கல் கே.எஸ் தியேட்டர்..

X
நாமக்கல்

நாமக்கல்

Nammakkal KS Theatre | நாமக்கலில் அமைந்துள்ள கே.எஸ்.திரையரங்கில் துணிவு திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் பெரும்பாலும் மது போதையில் வந்திருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

பொங்கல் ரிலீசாக திரையரங்குகளில் இன்று (ஜனவரி 11) அஜித்-ன் துணிவு , விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியிடப்பட்ட நிலையில் நாமக்கல்லில் மதுபோதையில் மது பாட்டிலுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகம் முழுவதும் நடிகர் அஜித்-ன் துணிவு மற்றும் விஜயின் வாரிசு திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 11 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. படம் வெளியாவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு முன் கூட தொடங்கி விட்டனர். மேலும் மது அருந்திவிட்டு திரையரங்குகளுக்கு வரக்கூடாது என நாமக்கல் போலீசார் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி நாமக்கலில் அமைந்துள்ள கே.எஸ்.திரையரங்கில் துணிவு திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் பெரும்பாலும் மது போதையில் வந்திருந்தனர்.

மது பாட்டிலுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்

அதில் ஒருபடி மேலே போய் ரசிகர் ஒருவர் மதுபாட்டிலுடன் திரையரங்கிற்கு வந்திருந்தார். அவர் மதுபோதையில் ஆட்டம் போட்டதுடன் தடுப்புகளின் மீது ஏறி அங்கிருந்தவர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

மேலும் பாதுகாப்பு கருதி திரையரங்குகளுக்கு முன் அமைக்கப்பட்ட தட்டிகள், தடுப்புகள் அனைத்தும் ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டது.

First published:

Tags: Actor Ajith, Cinema, Local News, Namakkal, Thunivu