ஹோம் /நாமக்கல் /

12 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தொட்டு அப்ப திருவிழா.. நாமக்கல் குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் துவக்கம்..

12 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தொட்டு அப்ப திருவிழா.. நாமக்கல் குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் துவக்கம்..

X
நாமக்கல்

நாமக்கல்

Thottu Appa Festival : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் 12 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தொட்டு அப்ப திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கைத்தறியில் பட்டு நெசவு செய்யும் தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களது இஷ்ட தெய்வமான சவுண்டம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் நடைபெறும். இந்த ஆண்டு தை மாத திருவிழாவையொட்டி இன்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் அவர்கள் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடுவதற்காக, ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் தேங்காய் பழம், இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் உள்ளிட்ட 1008 சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலுக்கு எடுத்து வந்தது கண்கொள்ளா கட்சியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இந்த ஆண்டின் முக்கிய விழாவாக, தை மாத திருவிழாவினை, அவர்களுடைய 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவாக தொட்டு அப்ப திருவிழாவாக விமர்சியாக இச்சமுதாயத்தினர் கொண்டாடுகின்றனர். இதற்காக இவர்கள் இன்று முதல் 5 நாட்கள் கடுமையான விரதம் இருந்து மார்பில் கத்தியால் தாக்கி கொண்டு தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த தயாராகி வருகின்றனர்.

First published:

Tags: Local News, Namakkal