ஹோம் /நாமக்கல் /

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகை - நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகை - நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரேயா பி.சிங்

ஸ்ரேயா பி.சிங்

Namakkal News :வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் நாமக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் நாமக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக கஷ்டப்படும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 400, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 750, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

தற்பொழுது 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான காலாண்டுக்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்.தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.

இதையும் படிங்க : நாமக்கலில் இப்படி ஒரு சுற்றுலா இடமா..? குடும்பத்துடன் குதூகலிக்கலாம்..!

சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படுகிறது. இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Local News, Namakkal, Tamil News