முகப்பு /நாமக்கல் /

ஏரி, குளங்களில் தண்ணீரை சேமிக்காவிடில் இதுதான் நடக்கும்.. எச்சரிக்கும் நாமக்கல் சமூக ஆர்வலர்கள்..

ஏரி, குளங்களில் தண்ணீரை சேமிக்காவிடில் இதுதான் நடக்கும்.. எச்சரிக்கும் நாமக்கல் சமூக ஆர்வலர்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

Save Water : ஏரி, குளங்களை தூர்வாரி நன்னீரை சேமிக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :
  • Namakkal, India

மொத்த நீர் பரப்பில் வெறும் 3% மட்டுமேஇருக்கும் நன்னீரை வீணாக கடலில் சேர்க்காமல் ஏரி குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று உலக தண்ணீர் தினத்தில் நாமக்கல் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீரை இன்று அனாவசியமாக பயன்படுத்தினால் வரும் காலங்களில் தண்ணீரை நாம் அத்தியாவசியத்திற்கு கூட பயன்படுத்த முடியாது. மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினமாகவும், மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.’ நீரின்றி அமையாது உலகு‘ என்றார் திருவள்ளுவர். இந்த உலகில் உள்ள எந்த உயிரினமும் நீர் இல்லாமல் வாழ முடியாது. உணவு இல்லாமல் கூட சில நாட்கள் தாக்கு பிடிக்கலாம். ஆனால் நீர் இல்லாமல் ஒரு நாளை கடத்துவதே பெரிது.

பூமிப்பரப்பில் 70% நீரால் தான் மூடப்பட்டுள்ளன. பின்னர் தண்ணீருக்கு என்ன பஞ்சம் வரப்போகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். தண்ணீர் குடிப்பது என்றால் எந்த நீரையும் குடித்துவிட முடியாது. நன்னீராக இருந்தால்தான் அதை பருக முடியும். கடல் நீரை எடுத்து குடித்துவிட முடியாது.

இதையும் படிங்க : கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

நன்னீர் என்று எடுத்துக்கொண்டால் பூமி பரப்பில் மொத்தமே 3% தான் உள்ளது. இந்த குடிநீரில் கிட்டத்தட்ட 65% பனிப்பாறைகளாக உறைந்துள்ளது. அதுபோக நதிகள், ஓடைகள், ஏரிகள் மற்றும் அணைகளில் 1% நன்னீர் தேங்கி நிற்கும். அது போக, நிலத்தடி நீராக 0.3% உள்ளது. அதிகப்படியான நன்னீர் இருக்கும் பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் வேகமாக உருகி கடல் நீருடன் கலந்து வருகிறது. அதனால் மீதம் இருக்கும் நீரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை அத்தியாவசியமாக மாறி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நன்னீரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மையை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதியன்று உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தேதியில் அதிகரித்து வரும் நீர் தேவையையும், அதை வீணாக்காமல் சரியாக பயன்படுத்து முறைகளையும் இந்த நாளில் ஆராய்ந்து ஏரிகள் கிணறுகள் மற்றும் கம்மாய்கள் போன்றவைகளை தூர்வாரி மழை நீர் காலங்களில் தண்ணீர் கல் வீணாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட சமூக ஆர்வலர்கள் மிகுந்த வேதனை உடன் கூறுகின்றனர்.

First published:

Tags: Local News, Namakkal, Save Water