ஹோம் /நாமக்கல் /

Namakkal | எல்லை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை- ஏராளமானோர் பங்கேற்பு

Namakkal | எல்லை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை- ஏராளமானோர் பங்கேற்பு

எல்லை அம்மன் கோவில் விளக்கு பூஜை

எல்லை அம்மன் கோவில் விளக்கு பூஜை

மேட்டுக்கடை பகுதியிலுள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டம் மேட்டுக்கடை என்ற பகுதியில் உள்ள எல்லை மாரியம்மன் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

  திருவிளக்கு பூஜை வழிபாடு என்பது ஒரு உன்னதமான நிகழ்வாக பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் போது இறைவனை நம் இடத்திலே கொண்டு வரும் நிகழ்வு என்று கருதப்படுகிறது.

  அதுமட்டுமின்றி திருவிளக்கு பூஜை போது சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. முழு மனதுடன் பூஜையில் ஈடுபடும் போது மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்றும் நம்பப்படுகிறது.

  குறிப்பாக ஒவ்வொரு மாதமும் விளக்கு பூஜையில் ஈடுபடும் போது பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறுகிறது. பௌவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்றார் போல் பலன் மாறுபடுகின்றன.

  அந்த வகையில் ஆடி மாதத்தில் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தால் ஆயுள் கூடும் என்று கருதப்படுகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த எல்லை மாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

  இதற்காக எல்லை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதன் பிறகு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் நல்ல எண்ணங்கள் மற்றும் உடல் நலத்துடன், நீண்ட ஆயுள் பெற வேண்டும், நல்ல மழைப் பொழிவு பெற வேண்டும் என்று பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

  செய்தியாளர்: மதன்- நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal