Home /namakkal /

Namakkal : "மனித நேயத்திற்கு யோகா" - அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் சார்பில் சிறப்பு யோகா பயிற்சி..

Namakkal : "மனித நேயத்திற்கு யோகா" - அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் சார்பில் சிறப்பு யோகா பயிற்சி..

நாமக்கல்

நாமக்கல் - சர்வதேச யோகா தினம்

Namakkal District : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி முதல் அரசு மருத்துவ மனைகளில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாவின் நன்மைகளையும் அதன் சிறப்புகளையும் அனைவரும் அறியும் வகையில் இந்தாண்டு 8ஆவது சர்வதேச யோகா தினம் நாடும் முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி முதல் அரசு மருத்துவ மனைகளில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் சார்பில் "மனித நேயத்திற்கு யோகா" என்ற தலைப்பில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் மோகன பானு முன்னிலை வகித்தார். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேசன் உடல் நலத்தை பேணிக் பாதுகாக்கும் யோகா பயிற்சிகளை செய்து காட்டினார்.

    மேலும் இன்றைய வாழ்க்கை முறையில் யோகா கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் உடலில் நேர்மறை ஆற்றலை கடத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் யோகா செய்வது  பெரும் பயனுள்ளதாக  இருக்கும். இன்றைய வேகமான உலகில், மக்கள் தினமும் யோகாவை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இயற்கை உணவு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி பானம் வழங்கப்பட்டது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal, Yoga day, Yoga Health Benefits

    அடுத்த செய்தி