திருச்செங்கோடு அருகே சாலையோரத்தில் உள்ள ஓடையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ குமாரபாளையம் செல்லும் வழியில் உள்ள ஓடை ஒன்று செரமிட்டாபாளையம் வழியாக செல்கிறது. இங்கு ஓடையிலும் செல்லும் வழியில் உள்ள சாலையோரத்திலும் மலை போல குப்பைகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளை எரிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, புகை மண்டலமும் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல்நல குறைபாடுகளும், மூச்சு திணறலும் ஏற்படுகிறது.
இதனிடையே இவ்வழியாக செல்பவர்களுக்கும், இங்கு வசிப்பவர்களுக்கும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த குப்பைகள் சாலையோரத்திலுலம் ஓடையிலும் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு அப்பகுதியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீரின் தன்மையும் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கைகள் எடுக்காததால் குமாரபாளையம் செல்லும் சாலையில் அங்கு குப்பைகள் கொட்ட வரும் குப்பை வண்டியை சிறைப்பிடித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களின் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களுக்கு சரிசெய்து தரப்படும் கூறியது அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.