Home /namakkal /

Namakkal : லாரி பாடி கட்டுமான செலவு எவ்வளவு.. பணிகள் முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Namakkal : லாரி பாடி கட்டுமான செலவு எவ்வளவு.. பணிகள் முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

லாரி

லாரி பாடி கட்டுமான தொழில்..

Namakkal District : லாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது லாரி பாடி கட்டுமானம். அதிக எடையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு கரடுமுரடான சாலைகளில் எல்லாம் பயணிக்கும் வகையில் லாரி பாடி கட்டுமானம் சரியான முறையில் அமையவேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது முட்டை தான். ஆனால் இதற்கு அடுத்த மிக முக்கிய தொழிலாக இருப்பது லாரி பாடி கட்டும் தொழில் தான். இந்த தொழில் மட்டும் நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். டன் கணக்கில் எடை கொண்ட சரக்குகளை பல்வேறு பயன்பாடுகளுக்காக நாள்தோறும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு லாரிகளின் பயன்பாடுகள் முக்கிய ஒன்றாக இருக்கிறது.

    லாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது லாரி பாடி கட்டுமானம். அதிக எடையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு கரடுமுரடான சாலைகளில் எல்லாம் பயணிக்கும் வகையில் லாரி பாடி கட்டுமானம் சரியான முறையில் அமையவேண்டும். இதில் சிறந்த முறையில் லாரி பாடி கட்டுமானத்தில் தரமான தரத்துடன் செய்து தருவதில் தமிழ்நாடு முன்னிலை இருக்கிறது என்றே சொல்லலாம்.

    லாரி பில்டிங் தொழில்..


    தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் லாரி கட்டுமானத் தொழில் பெரிதளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    இதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான லாரி பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. பிற மாநிலங்களில் லாரி பாடி கட்டுமானம் செய்தாலும் நேர்த்தியாகவும், தரமான முறையிலும் லாரி பாடி கட்டுவதற்கு நாமக்கல் பெயர் போனது.
    இதிலும் லாரி பாடி கட்டுவதில் திருச்செங்கோடு மிகப்பெரிய பங்கு வகுக்கிறது என்று கூறுகின்றனர்.

    லாரி பில்டிங் தொழில்..


    மேலும் ஷோரூமில் இருந்து ஒரு லாரி வந்த பிறகு அதற்கு பாடி கட்டி எவ்வாறு முழுமை பெரிது என்பது குறித்து, அர்த்தநாரீஸ்வரர் லேபர் மோட்டார் ஒர்க்ஸ் உரிமையாளர் ராஜாவிடம் நாம் கேட்டபோது, "நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் லாரி பாடி கட்டும் தொழில் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு லாரி ஷோரூமில் இருந்து கொண்டு வந்து அதனை முழுமையாக ஒரு லாரியாக மாற்றுவதில் தரமான பொருட்களை கொண்டு பாடி கட்டுவதில் நாங்கள் முழு வீச்சில் ஈடுபடுவதால் தான் திருச்செங்கோடு பகுதியில் இயங்கி வரும் லாரி பாடி கட்டும் பட்டறைகள் முக்கிய ஒன்றாக இருக்கிறது.

    லாரி பில்டிங் தொழில்..


    6 முதல் 16 வீல் கொண்ட அனைத்து விதமான லாரி மற்றும் டாரஸ் போன்றவைகளுக்கும் பாடி கட்டப்படுகிறது. லாரி உரிமையாளர்கள் எந்தமாதிரியான வடிவமைப்பில் கேட்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் பாடி கட்டித் தருவோம். இதில் அனைத்து வேலைகளும் செய்து முடித்து கொடுப்பதற்கு சுமார் 5 முதல் 6 லட்சம் வரையில் செலவாகும்.

    இதிலும், இரும்பு பொருட்கள் மற்றும் மரப்பொருட்கள் விலைகள் பொருத்து மாறுபடும்.மேலும் தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமும் 500 முதல் 700 வரையில் தரப்படுகிறது. மேலும் இது வேலை மற்றும் வேலைசெய்யும் நேரத்தை பொறுத்து மாறுபடும். ஒரு லாரியை முழுமையாக பாடி கட்டி, பெயின்டிங் என அனைத்து வேலைகளும் செய்து முடிக்க 20 நாட்கள் ஆகும். குறைந்து கிட்டத்தட்ட 15க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.

    லாரி பில்டிங் தொழில்..


    திருச்செங்கோடு பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட லாரி பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லாரிகளை பாடி கட்டுவதற்காக கொண்டு வருகின்றனர். இதிலும் திருச்செங்கோடு பகுதியில் அனைத்து வகையான லாரிகளுக்கும் பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகிறது.

    லாரி பாடி கட்டுமானம் என்பது பெயின்டிங், எலக்ட்ரிக்கல், வெல்டிங் என அனைத்தையும் உள்ளடக்கியது.
    இதனால் லாரி பாடி கட்டுமானத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் நம்பி இருக்கின்றன.

    லாரிக்கு பாடி கட்டுவதற்கு சந்தேகங்கள் மற்றும் தேவை இருந்தால் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். அர்த்தநாரீஸ்வரர் லேபர் மோட்டார் ஒர்க்ஸ் - 9842114583, 9976114583

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி