ஹோம் /நாமக்கல் /

சாதி, மத பேதமின்றி மக்கள் கொண்டாடும் சித்தாளந்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் சிறப்புகள்..

சாதி, மத பேதமின்றி மக்கள் கொண்டாடும் சித்தாளந்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் சிறப்புகள்..

சித்தாளந்தூர்  பெரிய மாரியம்மன் கோவில்

சித்தாளந்தூர் பெரிய மாரியம்மன் கோவில்

Thiruchengode Periya Mariamman Kovil | நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் வழியில் உள்ள சித்தாளந்தூர் என்ற பகுதியில் பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இங்குள்ள எட்டுப்பட்டி ஊர் மக்களும் சாதி, மதம் என்று பேதம் பாராமல் ஒற்றுமையுடன் சேர்ந்த விழா எடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Namakkal | Namakkal

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக சேர்ந்து பண்டிகை எடுத்து கொண்டாடும் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிய இங்கு காண்போம்.

  திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் வழியில் உள்ள சித்தாளந்தூர் என்ற பகுதியில் பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இங்குள்ள எட்டுப்பட்டி ஊர் மக்களும் சாதி, மதம் என்று பேதம் பாராமல் ஒற்றுமையுடன் சேர்ந்த விழா எடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

  பெரிய மாரியம்மன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறப்படுகிறது. அம்மன் அமைந்திருக்கும் இடத்திலே பெருமாள் சன்னதியும் அமைந்துள்ளதால் இக்கோயில் தனிச்சிறப்பு மிக்க ஒன்றாக உள்ளது.

  மேலும் படிக்க:  நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கொல்லிமலை அறப்பள்ளீஸ்வரர் கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  இக்கோயில் திருவிழாவின் போது பல சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. முக்கியமாக திருவிழாவின் போது பெருமாள் தன்னுடைய தங்கச்சியான மாரியம்மனுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்விற்காக எட்டுபட்டி ஊர் மக்களுக்கும் தெரிவிப்பதற்காக ஊர்வலமாக சென்று அழைப்பு விடுப்பார்.அதன் பின் வரும் மக்களுக்கு மொச்சை கொட்டை விருந்து அளிக்கப்படுகிறது.

  சித்தர்கள் வாழ்ந்த சித்தாளந்தூர்:

  மேலும் இந்த ஊரில் சித்தர்கள் வாழ்ந்ததால் இதற்கு சித்தாளந்தூர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதுவும் எங்கள் ஊருக்கு ஒரு சிறப்புமிக்க ஒன்றாக இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

  பெரிய மாரியம்மன் கோயில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பல நிகழ்ச்சிகளுடன் 21 நாட்கள் கொண்ட பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

  மேலும் படிக்க:  திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்த கொங்கு நாட்டு தலம்.!

  விழாவின் முக்கிய நிகழ்வாக மகமேறு,கம்பம் நடுதல்,சேறுவ எடுத்தல் என்று மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இங்குள்ள எட்டுபட்டிக்கும் சேர்ந்த அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வந்து இங்கு வேண்டுதல் மற்றும் விழாவில் பங்கேற்று செல்வார்கள்.பெரிய மாரியம்மன் கோயில் எங்களுக்கு புனிதமான ஒன்று.இக்கோயிலுக்கு அனைத்து மக்களும் சாதி மத பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் சேர்ந்து வந்து விழாவை சிறப்பாக நடத்தி கொடுப்பார்கள்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைப்பெறவில்லை. தற்போது இந்தாண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதல் கொண்டு தொடங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒவ்வொருவரும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு திருவிழா தொடங்கி உள்ளதால் இவ்வூர் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

  Published by:Arun
  First published:

  Tags: Local News, Namakkal