புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருடாவருடம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது இந்தாண்டு தேர்த்திருவிழா ஜுன் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா தொடங்க உள்ளதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் தேர்த்திருவிழாவில் அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேர், விநாயகர் தேர், அம்மன் தேர் செங்கோட்டுவேலவர் தேர், ஆதிகேசவ பெருமாள் தேர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து வடம் பிடித்து இழுப்பார்கள். இத்திருவிழா நாமக்கல் மாவட்டத்தில் மிக முக்கிய திருவிழாவும் ஒன்றாக உள்ளது.
தற்போது தேர்திருவிழா முதற்கட்ட திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் முன்னதாக தேர்களுக்கு முகூர்த்தகால் மற்றும் ரத பூஜை நடைபெற்று தேர்கள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.
இதனிடையே வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் தேர் கடைகளுக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உள்ளது. நூற்றுக்கணக்கான பொம்மை கடைகள், உணவு வகை கடைகள் என பல்வேறு விதமான கடைகள் இடம்பெறும். தற்போது இதற்காக கடைகள் அமைக்கும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா தொடங்கப் பட உள்ளதால் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடையே மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.