ஹோம் /Namakkal /

மலைக்கோவிலில் இருந்து திருச்செங்கோடு நகருக்கு எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மலைக்கோவிலில் இருந்து திருச்செங்கோடு நகருக்கு எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்

Thiruchengode Arthanareeswarar Temple: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து அர்த்தநாரீஸ்வரர், பெருமாள், திருமலையிருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற  அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து அர்த்தநாரீஸ்வரர், பெருமாள், திருமலையிருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

  திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருடாவருடம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை.  இந்தாண்டு தேர்த்திருவிழா சில நாட்களுக்கு முன்பு மலைக் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  இதனிடையே சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று ஆதிகேசவ பெருமாள் சாமிக்கு கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின் அர்த்தநாரீஸ்வரர்க்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களால் தூக்கி கொண்டு திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

  நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் மேப்:

  இந்த நிகழ்வில் ஒவ்வொரு மண்டபத்தில் அந்தந்த வகையறாவின் சிறப்பு மண்டபக் கட்டளைகள் மற்றும் சுவாமி வரவேற்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மண்டப கட்டளைதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா தொடங்கப்பட்டு உள்ளதால் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடையே மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதிலும் தேர்கடைகள் மற்றும் சிறிய தேர் முதல் பெரிய தேர் வரை வடம் பிடித்து இழுப்பதற்காக ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று உள்ளூர் மக்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Arun
  First published:

  Tags: Namakkal, Thiruchengode