Home /namakkal /

அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு.. மக்கள் வெள்ளத்தில் திருச்செங்கோடு...

அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு.. மக்கள் வெள்ளத்தில் திருச்செங்கோடு...

அர்த்தநாரீஸ்வரர்

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

Namakkal District: ஆசியாவிலே மிகப் பெரிய தேர்களில் நான்காவது தேராக கருத்தப்படும் அர்த்தநாரீஸ்வரர்பெரிய தேர் வடம் பிடித்து நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்களின் கரகோரசத்துடன் முதல் நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருடா வருடம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இது மக்களிடையே மிகுந்து கவலை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஏனென்றால் சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்தில் இத்திருவிழா முக்கிய பண்டிகையாக இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் தேர்த்திருவிழாக்கு வருகை புரிவார்கள்.

    இந்தாண்டு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் மலையிருந்து பல்லக்கில் நகருக்கு எழுந்தருளும் நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது. வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர், முருகன், பெருமாள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூப்பல்லக்கில் நான்கு ரத வீதி வழியாக மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வரப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, ஐந்தாம் நாள் திருவிழா, ஆறாம் நாள் விழா, ஏழாம் விழா என தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் ஒன்பதாம் நாள் திருவிழாவாக விநாயகர் தேர், செங்கோட்டு வேலவர் தேர் என முதற்கட்டமாக நுற்றுக்கண்க்கான பேர் பங்கேற்று தேர்கள் வடம் பிடித்த இழுத்தனர். இதில் குறிப்பாக 10ம் நாள் திருவிழாவான அர்த்தநாரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்று பெரிய தேரில் ரதம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது.

    மேலும் 11ம் நாள் தேர்த்திருவிழாவின் கொண்டாட்டமாக ஆசியாவிலே மிகப் பெரிய தேர்களில் நான்காவது தேராக கருத்தப்படும் அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேர் வடம் பிடித்து நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்களின் கரகோஷத்துடன் முதல் நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக மக்களின் சத்தத்ததிலும், மக்கள் வெள்ளத்திலும் திருச்செங்கோடு நகரமே தத்தளித்தது.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா தொடங்கப்பட்டு அர்த்தநாரீஸ்வரர் முதல் நாள் பெரிய தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தேரை‌ வடம் பிடித்து இழுத்தனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி