நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் வழியில் சித்தாளந்தூரில் கடந்த ஆண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டது தான் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் அரசுக் கல்லூரி வேண்டும் என்று நீண்ட நாட்கள் பல மாணவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இப்பகுதியில் உள்ளவர்கள் அரசு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 20 கிலோமீட்டருக்கு மேல் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது இக்கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளதால் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இக்கல்லூரியில் B.com., BBA, B.Sc.,( Computer Science ) BCA போன்ற இளங்கலை பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதற்கான சேர்க்கை முறைகள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல்கலைக்கழக விதிகளின் படி மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது. அனைத்து இளங்கலை பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பப் படிவ கட்டணம் ரூபாய் 48 மற்றும் பதிவு கட்டணமாக ரூபாய் 2 உள்ளது. இதில் SC/ST மாணவ மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கல்லூரியில் சேருவதற்கு அதிக பட்ச வயது வரம்பு OC- 21, மாற்றுத்திறனாளி- 26 மற்ற பிரிவினர்களுக்கு - 24 ஆக உள்ளது.
அதுமட்டுமின்றி இக்கல்லூரியில் சான்றிதழ் படிப்பாக "சைவ இலக்கியம்" (6 மாதம்) கற்றுத் தரப்படுகிறது. மாணவர்கள் அரசுப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தனியாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பினால், அதற்காகத் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்குவிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
திருச்செங்கோட்டில் இருந்து சிந்தாளந்தூர் செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதனை முதன்மைப்படுத்தியும், அனுபவமிக்க முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களைக் கொண்டும், மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை, உதவித் தொகை ஆகியன கிடைக்கும் வகையில் ஏராளமான வசதிகளுடன் இக்கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும் இக்கல்லூரி குறித்து சந்தேகங்கள் இருந்தால் 04288 26033, 99422 43993, 63743 71954 மற்றும் தொடர்பு கொள்ளலாம்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.